புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (12:51 IST)

உல்லாச அழகிகள் கும்பல்: தொழிலதிபர்களை குறிவைத்து நடந்த ஆபரேஷன்: திடுக்கிடும் தகவல்!!!

டெல்லியில் தொழிலதிபர்களை குறிவைத்து அவர்களை அடிபணிய வைத்து அவர்களிடம் பணம் பறித்து வந்த உல்லாச அழகிகள் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் மர்ம கும்பல் ஒன்று தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெரும் புள்ளிகளை குறிவைத்து அவர்களை ஆபாசமாக படம் பிடித்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.
 
அந்த கும்பலை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு உடம்பு சரியில்லை என ஒரு மருத்துவருக்கு போன் செய்து அவரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த அவருக்கு போதை மாத்திரை கொடுத்து, அவருடன் தகாத உறவில் இருப்பது போல புகைப்படம் எடுத்து அவரை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதேபோல் அந்த கும்பல் பல பெரும்புள்ளிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.
 
இதுகுறித்து நபர் ஒருவர் போலீஸில் புகார் அளிக்க போலீஸார் அந்த கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.