செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (21:54 IST)

ரஸல், கில் அதிரடி ஆட்டம்: டெல்லி அணிக்கு 179 ரன்கள் இலக்கு!

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடிய கில் 39 பந்துகளில் 65 ரன்களும், ரஸல் 21 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். மேலும் உத்தப்பா 28 ரன்களும், பியூஷ் சாவ்லா 14 ரன்களும் எடுத்தனர்
 
கொல்கத்தா தரப்பில் மோரிஸ், ரபடா மற்றும் பவுல், தலா இரண்டு விக்கெட்டுக்களையும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 
 
இன்னும் சில நிமிடங்களில் 179 என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி வீரர்கள் பேட்டிங் செய்யவுள்ளனர். டெல்லி அணியில் பிபி ஷா, தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இங்க்ராம் என நீண்ட பேட்டிங் வரிசை இருந்தாலும் குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர்களின் பந்துவீச்சை சமாளித்து இலக்கை எட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்