செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (07:50 IST)

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட ஒருவர் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்லியில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
 
இந்த நிலையில் தனது கொரோனா வந்துவிட்டதால் மன உளைச்சலில் இருந்த அவர் திடீரென ஜன்னலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக வந்த மருத்துவர் ஒருவர் அவர் தற்கொலை முயற்சி செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை காப்பாற்றினார். தற்போது அவருக்கு உளவியல் துறை நிபுணர்கள் கவுன்சிலிங் கொடுத்து வருவதாகவும் அவரை வேறு அறைக்கு மாற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்தநிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சலை போக்க கவுன்சிலின் வழங்கும் ஒரு குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன