1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (08:29 IST)

இந்தோனேஷியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு

இந்தோனேசியாவில்  ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 164 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.
 
இதற்கிடையே லம்பாக் என்ற தீவின் கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது. நிலநடுக்கம் ரிக்டரில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.
 
ஏற்கனவே இதனால் 82 பேர் பலியாகி இருந்தனர்.  நேற்று பலி எண்ணிக்கை 131 ஆக உயர்ந்தது.  இந்நிலையில் பலி எண்ணிக்கை 164 ஆக இன்று உயர்ந்துள்ளது.  1,400 பேர் தீவிர காயமடைந்து உள்ளனர். தொடர்ந்து சிறு சிறு நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். 
 
நிலநடுக்கம் காரணமாக  1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. வீடுகளை இழந்து தவிப்போர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.