கும்பல்படுகொலைகள் இந்துமதத்திற்கு எதிரான சதி – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் !

Last Modified திங்கள், 29 ஜூலை 2019 (08:57 IST)
நாட்டில் நடக்கும் கும்பல் படுகொலைகள் இந்துமதத்துக்கு எதிரான சதி என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பசுபாதுகாப்பு மற்றும் ஜெய்ஸ்ரீராம் என்ற பெயர்களில் கும்பல் படுகொலைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்புகள் செல்வாக்கு அதிகமாக உள்ள பகுதிகளான உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமாக உள்ளது.

இது சம்மந்தமாக 49 கலைஞர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் கடந்த சில நாட்களாகப் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து இது குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உத்தரப் பிரதேச மாநிலம் விருந்தாவனத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். அதில் ‘இந்து மதத்தின் மீது அவதூறு பரப்பும் நோக்கில் சதி நடந்துகொண்டிருக்கிறது. பசுவின் பெயரில் வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையில் சில சமூக விரோத கும்பல் படுகொலைகளில் ஈடுபடுகின்றனர். கும்பல் படுகொலைகளால் இந்துக்கள் தவறான வழியில் திசை திருப்பப்படுகின்றனர். இது இந்துக்களுக்கு எதிரான சதிச்செயல்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :