வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2019 (10:16 IST)

கோமியத்தால் புற்று நோயை குணப்படுத்த சுகாதாரத்துறை ஆராய்ச்சி

புற்று நோயை குணப்படுத்த கோமியத்தில் ஆராய்ச்சி நடைபெறுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

பசு மாட்டின் கோமியம் நோய் கிருமிகளை கொல்வதில் முக்கிய பங்கு வகிப்பதாக பல இந்துக்கள் நம்புகின்றனர். மேலும் பாஜக அரசு கோமியம் குறித்த ஆராய்ச்சியில் மூழ்கி வருகிறது.

இந்நிலையில் கோமியத்தால் புற்று நோயை குணமாக்க சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு வருவதாக அத்துறையின் மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், புற்றுநோய் போன்ற குணப்படுத்தவே முடியாத நோய்களுக்கான சிகிச்சை முறைகளில் கோமியம் பயன்படுத்தப்படுகிறது. ஆதலால் இந்த சிகிச்சை முறையை விரிவுபடுத்த ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

source ANI

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங், தான் மார்பக புற்று நோயை கோமியத்தை குடித்து குணப்படுத்தியதாக கூறியது குறிப்பிடத்தக்கது.