சிங்கங்களின் பெயரை மாற்ற நீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு சீதா எனப் பெயர் கூட்டப்பட்டது.
இதையடுத்து, சிலிகுரி உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு சீதா எனப் பெயர் சூட்டுவது இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகவும், இந்துக் கடவுளை அவமதிப்பதாகவும் கூறி, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சிங்கங்களின் பெயரை மாற்ற நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம். சீதா, அக்பர் பெயர் சர்ச்சையைத் தவிர்க்க சிங்கங்களுக்கு வேறு பெயரை மாற்றுங்கள் என மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.