தொடர்புடைய செய்திகள்
- எதிர்கட்சி என்று இல்லாமல் மனம் விட்டு பாராட்டிய ஓபிஎஸ்!
- கருப்பு பூஞ்சை தொற்று நோயையும் அரசு காப்பீட்டு திட்டத்தில் சேருங்கள்… ஓபிஎஸ் வேண்டுகோள்!
- குழந்தைகளை ஆட்டி படைக்கும் கொரோனா: 3 ஆம் அலைக்கு என்ன நிலையோ?
- 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராமம்!
- 69 வயதில் இளைஞர் போன்ற தோற்றத்தில் மம்மூட்டி!
மெல்ல மெல்ல குறையும் பாதிப்பு - இன்றைய கொரோனா அப்டேட்!
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தொட்டிருந்த நிலையில் தற்போது மெல்ல குறைந்து 2 லட்சத்திற்கும் கீழாக உள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,77,29,247 ஆக உயர்ந்துள்ளது. மேலும், புதிதாக 3,617 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,22,512 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,84,601 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,51,78,011 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
