வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (08:17 IST)

12 வயதுக்குட்பட்ட 682 பேர்களுக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு: மூன்றாவது அலையா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அறை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த அலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இந்திய அளவில் ஒரு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்தாலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் முதல் மூன்றாவது அலை வீச வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மூன்றாவது அறையில் சிறுவர் சிறுமிகளுக்கு தான் அதிக பாதிப்பு இருக்கும் என்று கூறப்படும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 வயதுக்குட்பட்ட 682 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இதனால் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வீசத் தொடங்கி விட்டதாக கூறப்பட்டாலும்  இதுகுறித்து சுகாதாரத் தொகையை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.