1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (08:15 IST)

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

Rahul Gandhii

லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, சாவர்க்கரை குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

 

 

கடந்த 2023ம் ஆண்டில் லண்டன் பயணம் சென்ற ராகுல்காந்தி, அங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, சாவர்க்கர் தான் எழுதிய புத்தகத்தில், தானும் தனது நண்பர்களும் இஸ்லாமிய நபர் ஒருவரை தாக்கியதாகவும், அதில் மகிழ்ந்ததாகவும் எழுதியுள்ளதாக பேசியிருக்கிறார்.

 

ஆனால் அப்படி ஒரு விஷயம் நடக்கவில்லை என்றும், அப்படியாக புத்தகத்தின் எந்த பகுதியிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் புனே நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
 

 

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 23ம் தேதியன்று விசாரணைக்காக புனே சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல்காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K