1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 நவம்பர் 2019 (08:41 IST)

காந்தி விபத்தில் இறந்தாரா ? – பள்ளிக் குறிப்பேட்டில் சர்ச்சைப் பதிவு !

ஒடிசா மாநில பள்ளி குறிப்பேட்டில் காந்தி தற்செயலான விபத்து ஒன்றில் இறந்ததாக சொல்லப்பட்டிருப்பது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசா மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவரது வாழ்க்கை சம்மந்தப்பட்ட குறிப்புகள் அடங்கிய இரண்டு பக்க குறிப்பேட்டை வழங்கியது. அதில் ஒரு பகுதியில் மகாத்மா காந்தி, டெல்லி பிர்லா இல்லத்தில் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி தற்செயலாக நடந்த சம்பவத்தால் இறந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இது சம்மந்தமாக முதல்வர் மன்னிப்பு கேட்டு அந்த குறிப்பைத் திரும்ப பெறவேண்டும் என குரல் எழுப்பியுள்ளனர். ஏற்கனவே குஜராத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றின் வினாத்தாளில் இதைப் போன்று காந்தியின் மரணம் தொடர்பாக சர்ச்சையானக் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.