வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (08:43 IST)

பிரதமர் மோடி, அமித்ஷாவை ட்ரோல் செய்து அனிமேஷன் வீடியோ! – காங்கிரஸ் வீடியோவால் பரபரப்பு!

Modi Troll
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவை ட்ரோல் செய்யும் விதமாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியாவில் தொடர்ந்து 2வது முறையாக பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டும் பாஜக ஆட்சி முடிவடைகிறது. இதனால் 2024 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் பாஜக பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலடியாக தற்போது காங்கிரஸ் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை விமர்சிக்கும் விதமாக அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அமித்ஷா இந்து, முஸ்லீம் மக்களிடையே சண்டையை ஏற்படுத்துவது போலவும், பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பிரித்தாளுவது குறித்த புத்தகத்தை படிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம் ராகுல்காந்தி மக்களை ஒன்றிணைப்பது போலவும், பாஜகவின் வெறுப்புக்கடை வீதியில் அன்பு கடையை திறப்பது போலவும், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, லாரியில் பயணம் செய்யும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸின் இந்த அனிமேஷன் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K