கர்நாடகாவில் நொடிக்கு நொடி திருப்பம்: சமநிலையில் காங்கிரஸ்-பாஜக

Last Modified செவ்வாய், 15 மே 2018 (08:59 IST)
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக, காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை பெற்று நொடிக்கு நொடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் மஜத கட்சியும் நல்ல எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருவதால் கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் இக்கட்சிக்கு பெரும்பங்கு இருக்கும் என்று கருதப்படுகிறது
சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி மொத்தமுள்ள 175 இடங்களில் காங்கிரஸ் 75 இடங்களிலும் 75 இடங்களிலும் முன்னிலை பெற்று சமநிலையில் உள்ளது மஜத கட்சி 25 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் கர்நாடகாவில் மஜத கட்சியின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :