1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 மே 2018 (08:50 IST)

கர்நாடகா தேர்தல்: திடீர் திருப்பம் முந்துகிறது பாஜக: 2 தொகுதிகளிலும் முதல்வர் சித்தராமையா பின்னடைவு

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எட்டு மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் வரை காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளிலும், பாஜக அதை தொடர்ந்தும் முன்னிலை பெற்று வந்தது.
 
ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி காங்கிரஸ் கட்சியை விட பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. அதாவது இதுவரை வெளிவந்துள்ள 168 தொகுதிகள் முன்னிலை நிலவரத்தில் பாஜக 78 தொகுதிகளிலும், காங்கிரஸ் 67 தொகுதிகளிலும், மஜத கட்சி 24 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. இந்த முடிவுகளை வைத்து பார்க்கும்போது ஆட்சி அமைப்பதில் மஜத கட்சியின் ஆதிக்கம் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது
 
மேலும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவில் இருப்பதாக முதல்கட்ட செய்திகள் வெளிவந்துள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர்.