செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (20:44 IST)

இட்லி விற்கும் சந்திரயான் 3 திட்ட பொறியாளர்

deepak kumar
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில்சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமான சந்திரனில் தரையிறக்கியது.

இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்கு இஸ்ரோ நிறுவனத்திற்கு உலக நிறுவனங்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும் கூறி வருகின்றன.

இந்த நிலையில், இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்திற்கு  ஏவுதளம் வடிவமைத்த ஜார்கண்டை சேர்ந்த பொறியாளர் தீபக்குமார், 18 மாதங்கள் ஊதியம் வழங்காததால் தன் செலவை சமாளிக்க வேண்டி, இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.

தினமும் பகலில் செல்லும் இவர், காலை மற்றும் மாலையில் இரு வேளைகளிலும் இடி, விற்று வருகிறார். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.3000 முதல் ரூ.400 வரை வருமானம் கிடைத்து வருவதாக தகவல் வெளியாகிறது.