வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (15:04 IST)

சென்னை தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது: முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்

isro sivan
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது என  முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தமிழகத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்றும், அடுத்ததாக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது என்றும்,  தனியார் வருகையால் இஸ்ரோ வளர்ச்சி பாதிக்காது என்றும் தெரிவித்தார்.
 
மேலும் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது என்றும்,  இன்னும் 400 ஏக்கர் நிலம் வரும் நவம்பர் மதத்திற்குள் ஒப்படைக்கப்பட உள்ளது என்றும், அதன்பின் கட்டுமான  பணிகள் 12 மாதத்திற்குள் முடிவடையும் என்றும்,  கட்டுமான பணிகள் முடிவடைந்ததில் இருந்து, குலசேகரப்பட்டினத்தில் ஓராண்டுக்குள் ராக்கெட் ஏவப்படும் என்றும்  முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்தார்.
 
Edited by Siva