செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (11:25 IST)

பெண் பாவம் பொல்லாதது... சந்திரபாபு நாயுடுவின் நிலை குறித்து ரோஜா பேச்சு!!

நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா பெண் பாவம் பொல்லாதது என சந்திரபாபு நாயுடுவின் நிலை குறித்து பேச்சு. 

 
சட்ட சபையில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தனது மனைவியை அவதூறாக பேசியதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியபோது கண்ணீர் விட்டு அழுதார். மேலும் மீண்டும் ஆட்சியை படிக்காமல் இங்கே நுழைய மாட்டேன் என கூறி சட்டப்பேரவையில் இருந்து ஆவேசமாக வெளியேறினார். 
 
செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுத முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா பேசியுள்ளார். 
அவர் கூறியதாவது, பெண் பாவம் பொல்லாதது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் என்னை அநியாயமாக ஒரு ஆண்டு காலம் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் தடை விதித்தனர். பெண் என்றும் பாராமல் என்னை அவதூறு கேலி செய்தனர். அன்று சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு நாள் முழுவதும் வெயிலில் காத்திருந்தேன். கண்ணீர் வடித்தேன்.
 
இதற்கெல்லாம் ஒருநாள் சந்திரபாபு நாயுடு பதில் சொல்ல வேண்டி வரும் என நினைத்தேன். அந்த நாள் இன்று வந்துவிட்டது. அவர் முதல்வராவது என்பது கனவில் கூட நடக்காது. எனவே கடவுளே வாழ்நாள் முழுவதும் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் செய்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.