வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (07:44 IST)

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நடிகை ரோஜா1

தமிழ் திரையுலகில் கடந்த 90கள் மற்றும் 2000ல் முன்னணி நடிகையாக இருந்த ரோஜாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆர்கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ரோஜா அதன் பின்னர் உழைப்பாளி, சூரியன், அதிரடிப்படை, வீரா, ராஜமுத்திரை, ஆயுதபூஜை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு என் வழி தனி வழி என்ற படத்தில் நடித்த ரோஜா அதன் பின்னர் ஆந்திர அரசியலில் குதித்தார் என்பதும் தற்போது அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை மற்றும் அரசியல்வாதி ரோஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்