1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (13:02 IST)

அறிவிப்பு வரும்வரை வெயிட் பண்ணுங்க! – விமான நிறுவனங்களுக்கு அமைச்சர் அறிவிப்பு!

விமான சேவை தொடங்குவது குறித்து அரசு அறிவிக்கும் வரை பொறுமை காக்குமாறு விமான நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று முதல் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. ஏற்கனவே ஏப்ரல் 14க்கு பிறகு விமான சேவைகளை தொடங்க விமான நிறுவனங்கள் முன்பதிவை அறிவித்த நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மே3 உடன் ஊரடங்கு முடியும் என்பதால் விமான சேவை தொடங்குவது குறித்தும், டிக்கெட் முன்பதிவு தொடங்குவது குறித்தும் விமான நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி ”கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே விமான சேவைகள் தொடங்கப்படும். மக்களுக்கு ஆபத்து இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். விமான சேவைகளை உரிய அறிவிப்ப்பு,, நேரமும் வழங்கப்படும்” என கூறியுள்ளார்.

இதன்மூலம் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை விமான சேவைகள் தொடங்கப்படாது என தெரியவந்துள்ளது.