ஒரே மாதத்தில் எக்கசக்க கொரோனா பலி
இரண்டாம் அலை கொரோனாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒருமாத உயிரிழப்பு மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தை கொரோனா இரண்டாவது அலை மே மாத தொடக்கம் முதலே பாடாய் படுத்தி வருகிறது. சமீபத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தற்போது குறைந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் வரை 14,046 பேர் பலியான நிலையில், மே மாதத்தில் 10,186 பேர் பலியானதையடுத்து மொத்த பலியின் எண்ணிக்கை 24,232 அதிகரித்துள்ளது. மே மாதம் மட்டும் 10,186 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் 42% பேர் கடந்த மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.