புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (10:47 IST)

வெளிநாட்டு இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கலாமா? மத்திய அரசு விளக்கம்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இது நாள் வரை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் தங்களுக்கும் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கடந்த பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
மேலும் தேர்தல் தொடர்பான அமைப்புகளுடன் தேர்தல் ஆணையம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இது குறித்த ஆலோசனை விரைவில் நடைபெறும் என்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இந்தியாவில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்கலாம் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது