ஃப்ரீயா தடுப்பூசி போடுறீங்களே.. அதுக்கு நிதி எப்படி வருது? - மத்திய அமைச்சரின் பதில்!
சமீப காலமாக பெட்ரோல் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் கூறியுள்ள பதில் வைரலாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்கட்சிகள் பலவும் கண்டித்து வருகின்றன.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி “நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவதன் மூலமாகதான் வசூலிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.