திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (21:55 IST)

ப.சிதம்பரத்தை அழைத்து சென்ற சிபிஐ அதிகாரிகள்: கைதா? என சற்று நேரத்தில் தெரிய வரும்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் அழைத்துச் செல்லபட்டார். இதனையடுத்து டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
ப.சிதம்பரத்தை கைது செய்து அதிகாரிகள் அழைத்து சென்றார்களா? அல்லது விசாரணைக்கு அழைத்து சென்று அதன்பின் கைது செய்வார்களா? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இதுவரை இல்லை
 
 
முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் ப.சிதம்பரம் வீட்டிற்கு சற்றுமுன் வந்தனர். அவரது வீட்டிற்கு முன் திரண்டுள்ள பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியும் தொண்டர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.