திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (14:47 IST)

தேச துரோகி என்று சொல்லலாமா...? இப்படி செய்தவரை...

நாட்டிற்காக தன்னலம் பாராமல் உழைத்து , விடுதலைக்காக போராடிய எண்ணற்ற விடுதலை போராட்ட வீரர்களில் மாகாத்மா காந்தி அவர்கள் முக்கியமானவர். அதனால் தான் அவர் தேசத்தந்தை என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டுவருகிறார். உலகில் உள்ள பல தலைவர்களுக்கும் காந்தி முன்மாதிரியாக திகழ்கிறார்.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தியின் பிறந்த நாள் விழா காந்தி ஜெயந்தி என்ற பெயரில் நாடுமுழுவதும்  கொண்டாடப்படுவது வழக்கம்.
 
இந்நிலையில் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் காந்தி சிலையை உடைத்திருக்கிறார்.
அவரை கைது செய்து போலீஸார் விசாரித்தபோது  அவர் மனநலம் சரியில்லாதவர் என்ற விவரம் தெரிந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.