புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (11:14 IST)

டிக் டாக்கில் வீடியோ – மனைவியைக் கொலை செய்த கணவன் !

டிக் டாக்கில் வேறு ஒரு ஆணுடன் தொடர்ந்து வெளியிட்ட மனைவியின் நடத்தையில் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன்.கூலி வேலை செய்யும் இவருக்கு சூரியகாந்தி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக சூரியகாந்தி டிக்டாக்கில் அதிகமாக ஆர்வம் காட்டி வந்துள்ளார். அதிலும் முசிறியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரோடு இணைந்து அதிகமான வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே டிக் டாக்கையும்  தாண்டிக் காதல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரும் இருந்த டிக் டாக் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக பரவியுள்ளன.

இதனால் ஆத்திரமடைந்த சூரியகாந்தியின் கணவர் சிவசங்கரன் சூரியகாந்தியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே நடந்த சண்டை முற்றவே ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்துள்ளார். பின்பு அவரை சாக்குப்பையில் கட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் போட்டுவிட்டு மனைவியைக் காணவில்லை என்றும் நாடகம் ஆடியுள்ளார். மேலும் மனைவியின் டிக்டாக் தோழர் மேல் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக சக்திவேலை விசாரணை செய்தான் தான் எளிதாகத் தப்பித்து விடலாம் என நினைத்துள்ளார் சிவசங்கரன். ஆனால் சூரியகாந்தியின் செல்போன் சிக்னல் அவர்கள் வீடு இருந்த பகுதியிலேயே ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருப்பதைக் கண்டு சிவசங்கரன் மேல் சந்தேகம் வர கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.