1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (12:03 IST)

முளைக்காத பற்கள்.. நடவடிக்கை எடுக்க பிரமருக்கு கடிதம்

இரு சிறுவர்கள் பற்கள் முளைக்கவில்லை என முதல்வருக்கும் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது வைரலாகி வருகிறது. 

 
ரிஸ்வான் மற்றும் ஆர்யான் என்ற இரண்டு சிறுவர்களும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சகோதரர்களான இவர்களுக்கு முன்பக்கம் இருக்கும் பற்கள் முளைக்கவில்லை. இதனால், அண்ணன் அம்மாநில முதல்வருக்கும் தம்பி பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளனர். 
 
அதில், ருசியான உணவுகளை சாப்பிடுவதில் எங்களுக்கு சிரமம் இருக்கிறது. பிடித்த உணவை மெல்லும் போது சிரமப்படுகிறோம். இதனால், பற்கள் முளைக்க என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். 
சிறுவர்களின் இந்த கடிதங்களை அவர்களின் மாமா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.