கருத்து கணிப்புகளை பொய்யாக்கி 3-வது முறை ஆட்சி அமைக்கும் பாஜக.. மீண்டும் முதல்வராகும் நயாப் சிங் சைனி..
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் எனத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு கூறியிருந்த நிலையில், கருத்துக்கணிப்பின்படி ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தாலும், ஹரியானாவில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானாவில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தாலும், அதன் பின்னர் பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனை அடுத்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து, கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் 37 தொகுதிகளில், இந்திய தேசிய லோக் நலம் இரண்டு தொகுதிகளில், மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதனை அடுத்து, ஹரியானா முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனி பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Siva