ஹரியானா பாஜகவுக்கு.. ஜம்மு காஷ்மீர் காங்கிரசுக்கு.. இதுதான் தேர்தல் முடிவா?
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில தேர்தல் முடிவடைந்து, இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரண்டு மாநிலங்களிலும் தலா ஒரு கூட்டணி ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
ஹரியானா மாநிலத்தில் ஆரம்பத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருந்தாலும், அதன் பிறகு பாஜக கூட்டணிக்குத் நிலைமை மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி ஹரியானாவில், பாஜக 50 தொகுதிகளில், காங்கிரஸ் 35 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை மற்றும் எதிர்க்கட்சிகள் ஐந்து தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே, ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அதேபோல், ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி 47 இடங்களிலும், பாஜக 29 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சி நான்கு இடங்களிலும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் பத்து இடங்களில் முன்னிலையில் உள்ளது. எனவே, இங்கு இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran