வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (16:58 IST)

முதல்வர் வீட்டின் முன் பாஜகவினர் திடீர் போராட்டம்.. காரணம் இதுதான்..!

BJP
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் பாஜகவினர் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ல்லியில் அரசு நிதிபெற்று இயங்கி வரும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் பாஜக எம்எல்ஏக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 
 
கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியில் உள்ள கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வரவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கெஜ்ரிவால் தலைமையிலான அரசு ஆசிரியர்களை வெளிநாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்புவது குறித்து ஆளுநரிடம் மோதல் போக்கில் நடைபெற்று வருகிறது என்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது டெல்லி அரசுக்கு கவலை இல்லை என்றும் பாஜக உறுப்பினராக உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva