திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 15 நவம்பர் 2017 (11:54 IST)

தொண்டரை கால் அமுக்க விட்ட பாஜக எம்.எல்.ஏ.; வைரல் வீடியோ

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ஒருவருக்கு அவரது தொண்டர் கால் பிடித்துவிடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.


 

 
உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் 22ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடங்கவுள்ளது. இதற்காக அங்கு அனைத்து கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலகாபாத் தெற்கு பகுதியில் நேற்று பாஜக எம்.எல்.ஏ. நந்த கோபால் குப்தா நந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 
இதையடுத்து அவர் ஓய்வெடுக்க கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தொண்டர் ஒருவர் கால் பிடித்துவிடும் காட்சி வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் போது நந்த கோபால் குப்தா நந்தியுடன் மேலும் இரண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்துள்ளனர்.
 
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்று நேற்று காவல்துறையினர் ஒருவருக்கு பெண் காவலர் மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
 

நன்றி: ANI & Daily Motion