Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டி.ஆர். எல்லாம் ஒரு ஆன்மீகவாதியா? வெளுத்து வாங்கும் தன்ஷிகா


sivalingam| Last Modified திங்கள், 13 நவம்பர் 2017 (22:05 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 'விழித்திரு' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தன்ஷிகா பேசிய போது டி.ராஜேந்தர் பெயரை மறந்துபோய் சொல்லாமல் விட்டுவிட்டார். உடனேல் மைக்கை பிடித்த டிஆர், தனது அடுக்கு மொழி வசனங்களால் தன்ஷிகாவை வறுத்தெடுத்துவிட்டார்.

 


தனது செயலுக்கு மேடையிலேயே தன்ஷிகா மன்னிப்பு கேட்டும் பெண் என்றும் பாராமல் அன்றைய தினம் டி.ஆர், நடந்து கொண்ட விதம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. இந்த சம்பவத்திற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய தன்ஷிகா இதுகுறித்து முதன்முறையாக மனம் திறந்து சில கருத்துக்களை கூறினார். அவர் கூறியதாவது: "டி.ஆர். சர்ச்சை குறித்து தன்ஷிகா ஏன் பேச மறுக்கிறார் என பல ஊடகங்களும் என்னை நோக்கி கேள்வி எழுப்பின. அந்த சம்பவத்தில் இருந்து வெளியில் வரவே எனக்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகின. டி.ஆர். சார், நான் ஒரு ஆன்மிகவாதி எனக் கூறினார். ஆனால், எந்த ஒரு ஆன்மிகவாதியும் அப்படி குரலை உயர்த்திப் பேசமாட்டார்.

எனக்கு அதிகமாகக் கோபம் வரும். அதனைக் கட்டுப்படுத்த நான் தியானம் செய்கிறேன். அதனால்தான் இப்போது அமைதியாக இருக்கிறேன். எப்போது நான் ஆன்மிக பாதையில் செல்லத் தொடங்கினேனோ, அப்போது முதல் சாந்தமாகிவிட்டேன். அதன் காரணமாகவே, அன்று அந்த சம்பவத்தின்போது நான் அமைதியாக இருந்தேன். அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பெண்கள் இந்த சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்களை சந்திக்க நேர்கிறது.

அதற்காக ஒட்டுமொத்த ஆண்களையும் நான் குறைகூறவில்லை. மீரா கதிரவன் போன்ற இயக்குநர்களால்தான் நான் இன்று சினிமாத் துறையில் நடிகையாக இருக்கிறேன். டி.ஆர். பிரச்சினையை இத்துடன் முடிக்க விரும்புகிறேன்" என்று தன்ஷிகா கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :