வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:59 IST)

இது பாஜக சொத்து அல்ல, நாட்டின் சொத்துக்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

பாஜக அரசு விற்பனை செய்வதற்கு இது பாஜகவுக்கு சொந்தமான சொத்து அல்ல நாட்டின் சொத்துக்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்பனை செய்தும் குத்தகைக்கு விட்டும் 6 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. எந்தெந்த சொத்துக்களை விற்பனை செய்வது என்பது குறித்த விவரங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது 
 
இந்த நிலையில் பாஜகவின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து கூறிய போது நாட்டின் சொத்துக்களை விற்கும் பாஜக அரசின் முடிவு துரதிஷ்டமானது என்றும் நாட்டின் சொத்துக்கள் பாஜகவின் சொத்துக்கள் அல்ல என்றும் நாட்டின் சொத்துக்களை விற்க முடியாது என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்