வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 24 ஜூன் 2018 (15:13 IST)

சுடுகாட்டில் படுத்துத் தூங்கிய எம்.எல்.ஏ

சுடுகாட்டை புதுப்பிக்க தொழிலாளர்கள் அச்சப்பட்டதால், அவர்களின் பயத்தைப் போக்க ஆந்திர மாநில எம்.எல்.ஏ ஒருவர் சுடுகாட்டில் படுத்துத் தூங்கினார்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோல் எம்.எல்.ஏவான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிம்மல ராம  நாயுடு, அப்பகுதியில் உள்ள சுடுகாட்டை புதுப்பிக்க அரசிடம் கோரிக்கை விடுத்தார். இதனையேற்று சுடுகாட்டை சீரமைக்க அரசு ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கியது.
 
ஆனால் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அந்த சுடுகாட்டை சீரமைக்க யாருமே டெண்டர் எடுக்க முன் வரவில்லை. கடைசியாக ஒருவர் டெண்டர் எடுத்து பணிகளை துவங்கினார். ஆனால் பணி துவங்கி சில நாட்களிலே அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியையடுத்து தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை. 
 
இதனையடுத்து யோசனை செய்த எம்.எல்.ஏ  நேற்று முன்தினம் உணவு மற்றும் கட்டிலுடன் சுடுகாட்டுக்கு சென்று அங்கேயே சாப்பிட்டுவிட்டு உறங்கினார். பின் அடுத்தநாள் காலை வீட்டிற்கு சென்றார். அவருடன் ஒரே உதவியாளர் மட்டும் இருந்துள்ளார்.
 
எம்.எல்.ஏ வின் இந்த முயற்சியால் 50 தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கினர். பேய், பிசாசு பயத்தை போக்கவே இப்படி செய்தேன் என நிம்மல ராம  நாயுடு தெரிவித்தார்.