1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:39 IST)

சேட்ட புடிச்ச பசங்க சார்..! ஹால்டிக்கெட்டில் மோடி, தோனி படம்!

Lalith Narayana University
பீகார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஹால்டிக்கெட்டில் மாணவர்கள் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி, தோனி உள்ளிட்டோர் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் மற்றும் இதன் உறுப்பு கல்லூரிகளில் உள்ள மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளது.

இதற்கான ஹால்டிக்கெட்டுகளை பல்கலைக்கழகம் ஆன்லைனில் வெளியிட்டிருந்தது. அதில் சில ஹால்டிக்கெட்டுகளில் மாணவர்களின் புகைப்படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் பீகார் ஆளுனர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து விளக்கமளித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், ஹால்டிக்கெட்டுக்கான புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டபோது சிலர் குறும்பு தனமாக இந்த புகைப்படங்களை அனுப்பி இருக்கலாம் என்றும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.