வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:51 IST)

பெட்ரோல் போட காசு இல்லப்பா.. எருமை மாட்டில் வந்த வேட்பாளர்! – வைரலாகும் வீடியோ!

பீகார் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாமினேசன் செய்ய வேட்பாளர் ஒருவர் எருமையில் வந்தது வைரலாகியுள்ளது.

பீகாரில் உள்ளாட்சி பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடந்து வருகிறது. பல்வேறு கட்சி சார்ந்தும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பீகாரின் கட்டிஹர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பஞ்சாயத்தில் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர் அசாத் ஆலம் நேற்று வேட்புமனு தாக்கலுக்கு எருமை மாட்டில் அமர்ந்து ஒரு குச்சியை கையில் வைத்துக் கொண்டு சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்து ஆலம் ”நான் ஒரு சாதாரண கால்நடை வளர்ப்பவன். பெட்ரோல் போடும் அளவு வசதி இல்லாததால் வாகனங்கள் இல்லாமல் எருமை மாட்டில் வந்தேன்” என தெரிவித்துள்ளார்.