1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2023 (08:23 IST)

துருக்கி பூகம்பத்தில் பெங்களூர் நபர் மாயம்.. தேடும் பணி தீவிரம்..!

turkey
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக 15000 அதிகமானோர் பலியான நிலையில் இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இடிப்பாடுகளுக்கு இடையே கும்பல் கும்பலாக பிணங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் துருக்கி சென்ற பெங்களூரை சேர்ந்த ஒருவர் மாயமானதாகவும் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
துருக்கியில் உள்ள இந்தியர்கள் குறித்த தகவல்களை பெற அந்நாட்டு காவல்துறை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 10 இந்தியர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் 
 
ஆனால் பெங்களூரை சேர்ந்த ஒரு இந்தியர் மட்டும் மாயமாகி உள்ளதாகவும் அவரது பெயர் சஞ்சய் வர்மா என்றும் அவரைத் தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக இருப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva