துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவரைக் காணவில்லை!
துருக்கி மற்றும் சிறிய ஆகிய இரண்டு நாடுகளில் அடுத்தடுத்து பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.
இந்தக் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 9 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் மீட்பு பணிகள் நடைபெற இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 10 மாகாணங்களில் 3 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், துருக்கில் நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து இந்தியர்கள் 75 பேர் உதவி கேட்டுள்ளதாகவும், இதில், ஒரு நபரைக் காணவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது