வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 பிப்ரவரி 2019 (21:03 IST)

காதலர்களை மிரட்டி...திருமணம் செய்து வைத்த பஜ்ரங் தள் அமைப்பு

தெலங்கானா மாநிலம் மேச்சல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பூங்கா உள்ளது. இன்று காதலர் தினம் ஆகையால், இங்கு  அமர்ந்து பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடிக்கு பஜ்ரங் தள் அமைப்பினர் கட்டாயப்படுத்தி  திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
பஜ்ரங் தள் அமைப்பினர் காதலர் தினத்தை வெளிநாட்டு கலாச்சாரம் என்று கடுமையாக எதிர்ப்பார்கள். எனவே பொது இடத்தில் கூடும் காதலர்களை ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பார்கள்.இன்றும் அதே போன்ற சமபவம் நடந்துள்ளது.
 
தெலங்கானா மாநிலம் மேச்சல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடிக்கு பஜ்ரங் தள் அமைப்பினர் கட்டாயப்படுத்தி  திருமணம் செய்து வைத்துள்ளனர்.
 
ஏற்கனவே காதலர்களுக்கு கட்டாய திருமணம் நடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக போலீஸார் பா இடங்களில் மக்கலின் பாதுகாப்புக்காகப் போட்டப்பட்டனர்.
 
இருப்பினும் இவ்வமைப்பினர் போலிஸாருக்கு தெரியாமல் சில ஜோடிகளுக்கு பொது இடத்தில் வைத்து கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.