திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (08:12 IST)

தினமும் ஒரு சர்ச்சை கருத்து! இன்று பாபா ராம்தேவ் கூறியது இதுதான்!

மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக வென்ற தினமான மே 23ஆம் தேதியை மோடி தினம் என கொண்டாட வேண்டும் என்று சர்ச்சை பேச்சுகளுக்கு சொந்தக்காரரான பாபா ராம்தேவ் கூறியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
3வது குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு ஓட்டுரிமை உள்ளிட்ட உரிமைகள் வழங்கக்கூடாது என்ற சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் இவ்வாறு ஒரு சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவில் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்றும் நேற்று பாபா ராம்தேவ் பேசிய சர்ச்சைக்கருத்தின் பரபரப்பே இன்னும் அடங்கவில்லை
 
இந்த நிலையில் மீண்டும் இன்று அவர் ஒரு சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். நேற்று ஹரித்துவாரில் செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம்தேவ், 'மோடியின் வெற்றி கோடிக்கணக்கான மக்களின் வெற்றி என்றும், ஒரு பக்கம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் இன்னொரு பக்கம் மோடி மட்டும் தனியாகவும் இந்த தேர்தலில் சண்டையிட்டதாகவும், இதில் மோடி வெற்றி பெற்றதாகவும் கூறிய பாபா ராம்தேவ், தற்போதுதான் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்வதாகவும் தெரிவித்தார். 
 
மே 23ஆம் தேதி கிடைத்த இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த தேதியை மோடி தினம் அல்லது லோக் கல்யாண் தினம் என கொண்டாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பாபா ராம்தேவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன