1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (15:09 IST)

3வது குழந்தைக்கு வாக்குரிமை இல்லையா? மோடியும் வாக்குரிமை இழப்பார்: ஒவைசி பதிலடி

3வது குழந்தைக்கு வாக்குரிமை இல்லை என்று சட்டம் கொண்டு வந்தால் பிரதமர் மோடியும் வாக்குரிமையை இழப்பார் என ஏஐஎம்.ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். 
 
நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம்தேவ், இந்தியாவின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள யாரையும் அனுமதிக்க கூடாது என்றும் மீறி மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தால் அந்த குழந்தைக்கு ஓட்டுரிமை கொடுக்க கூடாது என்றும் பேசினார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று பேசிய ஏஐஎம்.ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி, பாபா ராம்தேவ் கூறுவது போல் இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் பிரதமர் மோடியும் ஓட்டுரிமையை இழப்பார். ஏனெனில் அவரது குடும்பத்தில் அவர் மூன்றாவது குழந்தைதான் என்று கூறினார்.
 
மேலும் சிறுபான்மையினர்களின் அச்சத்தை நீக்க வேண்டும் என்று உதட்டளவில் சொன்னால் மட்டும் போதாது என்றும் பசுப்பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இருக்கும் குண்டர்களை அடக்கினாலே சிறுபான்மையினர்களின் அச்சம் விலகிவிடும் என்றும் ஒவைசி மேலும் தெரிவித்தார்.