திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 1 அக்டோபர் 2018 (13:29 IST)

இனி 20 ஆயிரம் மட்டும் தான்: ஸ்டேட் பேங்கின் புதிய அறிவிப்பு - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் தான் எடுக்க முடியும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பேங்கின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து நாள் ஒன்றிற்கு 40,000 வரை ஏடிஎம்மில் எடுத்துக் கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.
 
இந்நிலையில் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி. ஏடிஎம்மிலிருந்து ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் எடுக்கும் வரம்பை பாதியாக குறைத்துள்ளது. அதன்படி இனி அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஏடிஎம்மில் எடுக்க முடியும்.
வரும் 31-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.