செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (18:29 IST)

ஏடிஎம் மோசடியை தடுக்க எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு

தற்போது பயன்படுத்தி வரும் ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு புதிய சிப் அடிப்படையிலான ஏடிஎம் கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 
ஏடிஎம் கார்டுகளை ஸ்மிக்கர் கருவிகள் மூலம் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் தகவல்கள் திருடப்பட்டு மோசடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடியை தடுக்க வங்கிகள் மற்றும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
 
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டுகளை திருட முடியாத வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சிப் அடிப்படையிலான கார்டுகளை வழங்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு சிப் போன்ற ஏடிம் கார்டுகளை வழங்க எஸ்,பி.ஐ வங்கி தயாராகிவிட்டது.
 
தற்போது அனைத்து வங்கிகளும் பாதுகாப்பு அம்சங்களுடைய ஏடிஎம் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.