Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு; சுப்பிரமணியன் சுவாமி

2g
Last Updated: ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (12:55 IST)
2ஜி அலைக்கற்று வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக பாஜக மூத்த அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது எனக்கூறி நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார். 
 
இந்நிலையில் இதுகுறித்து நெல்லையில் பேசிய பாஜக மூத்த அமைச்சர்  சுப்ரமணிய சுவாமி, 2ஜி வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விட்டதாகவும், ஆனால் நான் அதை விடப்போவதில்லை என்றும் கூறினார். மேலும் 2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கித் தரப் போவதாக கூறினார். இந்த வழக்கில் தாம் கண்டிப்பாக வெற்றி அடையப் போவது உறுதி என்றும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :