திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2018 (23:55 IST)

20 ஆண்டுகளாக நடந்து வரும் காவிரி வழக்கின் தீர்ப்பு தேதி

கடந்த 20 வருடங்களாக காவிரி பிரச்சனை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்னும் 4 வாரத்தில் வழங்கப்படும் என அரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சனை குறித்து கர்நாடகாவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.. இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது இன்னும் 4 வாரங்களில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் நலன்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு 20 வருடங்களுக்கு பின் தீர்ப்பு வழங்கப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.