வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (07:59 IST)

நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எண்ணெய் ஆலையில் நள்ளிரவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எண்ணெய் எரிந்து நாசமாகியது. அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய் ஆலையில் நள்ளிரவில் தீப்பிடித்தது. 
 
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். எண்ணெயில் பற்றிய தீ என்பதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு துறையினர் பெரிதும் போராடினர். தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.