1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (11:22 IST)

சொன்னதை செய்த ஜெகன்: இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!!

ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார். 

 
ஆந்திராவில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றம், மாநிலங்களவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெற்றது. தற்போது ஜெகன்மோகன் ரெட்டி அங்கு முதலமைச்சராக உள்ளார். அவருக்கு கோயில் கட்டுமளவு அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. 
 
ஜெகன் முதல்வராக இல்லாமல் ஆந்திர மக்களின் குடும்பங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிறார். எனவே, அவர் என்ன செய்தாலும் அது வியக்கதக்க வகையில் பாரட்டை பெறுகிறது. ரேசன் பொருட்கள் பொதுமக்களின் வீடு தேடி வரும் என தேர்தல் சமயத்தில் வாக்குகுறுதி அளித்திருந்தார் ஜெகன் மோகன் ரெட்டி.
 
அதன்படி, ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார். 13 மாவட்டங்களில் உள்ள கிராம பணியாளர்கள் மூலம் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க ஆந்திர அரசு திட்டம் தீட்டியுள்ளது. 
 
மேலும் ரேசனில் வழங்கப்படும் அரிசி கடைகளில் விற்கப்படும் அரிசி போன்றே தரமானதாக இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ரேசன் பொருட்கள் பாக்கெட்டுக்களாக பேக் செய்யப்பட்டு வீடு தேடி வழங்கப்படும் என்றும் ஆந்திர அரசு கூறியுள்ளது.