வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (14:13 IST)

’எது வேண்டுமானாலும் நடக்கலாம், எதற்கும் தயார் ’ : அருண்ஜெட்லி அறிவிப்பு

எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் நிலையில்  எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்றும்,  எதற்கும் இந்தியா தயார் நிலையில் இருப்பதாகவும் மத்திய  அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, பில்லேடன் விவகாரத்தில் பாகிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுத்ததோ அதே போன்ற நடவடிக்கை எடுக்க எல்லாவிதத்திலும் தயாராக இருப்பதாக அருண்ஜெட்லி தெரிவித்தார்.
 
இந்நிலையில் அடுத்தத்து இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது முப்படை தளபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம் பாரத பிரதமர் மோடி முக்கியமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே சர்வதேச விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் அமைதிகாக்க சீனாவும் அந்நாட்டை அறிவுறுத்தியுள்ளதாகாவும் தகவவல் வெளியாகிறது.