வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 ஜூன் 2018 (10:13 IST)

மீண்டும் தமிழகத்தில் மேலவை: எம்.எல்.ஏ ஆகும் பாஜகவினர்

தமிழகத்தில் மீண்டும் மேலவை ஆரம்பித்து அதன் வழியே சட்டமன்றத்தில் நுழைய பாஜகவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
 
தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் நோட்டாவுடன் கடுமையான போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில் எம்.எல்.ஏ ஆவது எட்டாக்கனி என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பாராளுமன்றத்தில் ராஜ்யசபா இருப்பது போல் தமிழகத்தில் சட்டமேலவை கொண்டு வந்து அதன்மூலம் சட்டசபையில் நுழைய பாஜகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
கடந்த 1986ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது மேலவையை கலைத்தார். அதன்பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபோது மேலவைக்கு மீண்டும் முயற்சி செய்வதும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின்னர் மேலவைக்கு முட்டுக்கட்டை போடுவதுமாக இருந்தது
 
இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை பயன்படுத்தி மீண்டும் மேலவையை கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், அனேகமாக வரும் சட்டமன்ற கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் போடப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
மேலைவை உறுப்பினர்களில் ஒருசில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கவர்னர் நியமனம் செய்வார். அவ்வாறு கவர்னரால் நியமனம் செய்யப்படுபவர்களில் பெரும்பாலும் பாஜகவினர்களாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது