1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2017 (12:14 IST)

கொசுக்களை உற்பத்தி செய்பவர்களுக்கு சிறை தண்டனை; ஆந்திரா முதல்வர் அதிரடி

கொசுக்கள் உருவாகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு அதிரடியாக தெரிவித்துள்ளார்.


 

 
டெங்கு காய்ச்சலால் நாடு முழுவதும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் டெங்கு காய்ச்சல் பரப்பக்கூடிய கொசுக்களை கட்டுப்படுத்த மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
அதன்படி ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு டெங்கு காய்ச்சலை தடுக்க அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். கொசுக்கள் உருவாகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
இதுதொடர்பான மசோதாவுக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகமால் மக்கள் சுற்றுச்சுழலை சுத்தமாக வைத்திருப்பார்கள் என ஆந்திரா அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.