திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 செப்டம்பர் 2018 (08:18 IST)

ஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி

25 வருடங்களுக்கு மேலாக தனது நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வைர வியாபாரி ஒருவர் பென்ஸ் கார் வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரத்தில் பிரபல வைர ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருபவர் தான் சவ்ஜி தோலாகியா. இவர் தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிறப்பான சலுகைகளை அவ்வப் போது வழங்கி வருகிறார். இவரது நிறுவனத்தில் தற்பொழுது 5500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் இந்நிறுவனத்தில் 25 வருடங்களாக வேலை செய்யும் 3 ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக சவ்ஜி அவர்களுக்கு தலா ஒரு கோடி மதிப்பிலான 3 பென்ஸ் காரை மூன்று பேருக்கு வழங்கியுள்ளார். இதனை எதிர்பார்க்கவில்லை என அந்த ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.